பேராசிரியர் கலாநிதி சபா ஜெயராசா இலங்கைத் தமிழ் கல்விப் பாரம்பரியத்தின் மிக முக்கியமான ஒரு புலமையாளர் ஆவார். யாழ் பல்கலைக்கழக கல்வியியல் பீடத்தின் பேராசிரியாரான இவர் நுண்கலைப்பீடத்தின் தலைவராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் தனது விரிவுரைகளை ஆற்றி வருகிறார்.
கல்வி, இலக்கியம், நுண்கலை எனப் பல்துறைகளிலும் தனது ஆழமான தடத்தைப் பதித்திருக்கிறார். அவர் எழுதிய நூல்களுக்கான தொடுப்பு நூலகம் இணையத் தளத்திலிருந்து
ஜெயராசா, சபா." பகுப்பிலுள்ள கட்டுரைகள்
கலைச்சொல் ஆக்கத்தில் இவரது பங்களிப்பு முக்கியமானது. பல ஆங்கிலச் சொற்களுக்கான சிறப்பான தமிழ் சொற்களைத் தனது கட்டுரைகளிலும், உரைகளிலும் பயன்படுத்திவருகிறார்.
மொழி தேங்கியதாக இருக்கக் கூடாது. அது காலத்தோடு இணைந்து மாற்றங்களுக்கு இசைந்தும், புதிய தேவைகளுக்காக வளைந்தும், வளர வேண்டியது அவசியம். இதற்கு ஆங்கில மொழியில் வழங்கப்படும் பல அறிவியல் சமூகவியல் சார்ந்த சொற்களுக்கு அவர் ஆக்கிப் பயன்படுத்தும் பல அற்புதமான கலைச்சொற்களை கண்டு நான் வியந்திருக்கிறேன். என்னால் முடிந்தவரை உபயோகி்க்கவும் முயல்கிறேன். அதற்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவும் செய்கிறேன்.
இது பற்றிய அவரது கருத்தை நவம்பர் ஞானம் இதழுக்கு வழங்கிய நேர்காணலில் காணலாம்.
தொடர்ந்து படியுங்கள்..
அண்மையில் சாஹித்திய இரத்தினம் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார். தகுதியுள்ள ஒருவருக்கு கிடைத்த பொருத்தமான விருது. அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'சாஹித்திய இரத்தினம்' விருது பெற்றமைக்காக ஞானம் கலை இலக்கியப் பண்ணை நடாத்தும் பாராட்டு விழா எதிர்வரும் ஞாயிறு 18-12-2011 மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்சங்க மண்டபத்தில் (இல. 07, 57ஆவது ஒழுங்கை), வெள்ளவத்தையில் நடக்க இருக்கிறது.
தலைமை:- கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்,
பேராசிரியர் மா. கருணாநிதி
5.00 : மங்கல விளக்கேற்றல்
5.10 : தமிழ்மொழி வாழ்த்து
- திருமதி ஹேமவதி கபிலதாஸ்
- திருமதி நீதிமதி யோகராஜன்
5.20 : வரவேற்புரை - சமூகச்செம்மல் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
(உப தலைவர், ஞானம் கலை இலக்கியப் பண்ணை)
5.30 : தலைமையுரை
5.40 : வாழ்த்துரை - திரு. மு. கதிர்காமநாதன் (தலைவர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
5.50 : பாராட்டுரைகள்-
திரு. அந்தனி ஜீவா (ஆசிரியர், 'கொழுந்து' சஞ்சிகை)
திரு. கே. எஸ். சிவகுமாரன்
(இலக்கியத் திறனாய்வாளர்)
திரு. தெ. மதுசூதனன்
(ஆசிரியர், 'ஆசிரியம்' சஞ்சிகை)
6.30 : ஒளிப்படம் - பேராசிரியர் சபா ஜெயராசா
அவர்களின் வாழ்வும் பணியும்|
6.40 : 'சாஹித்திய இரத்தினம்' பேராசிரியர் சபா ஜெயராசா
அவர்களுக்கான கௌரவம்
ஞானம் சஞ்சிகையின் வாழ்த்துப்பா
கவிதை ஆக்கம் : காப்பியக்கோ ஜின்னஹ் ஷரிபுத்தீன்
வாசித்தளிப்பவர் : ப.க. மகாதேவா,
(தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்)
6.55 : ஏற்புரை - சாஹித்திய இரத்தினம் பேராசிரியர் சபா ஜெயராசா
7.15 : நன்றியுரை - தி. ஞானசேகரன் பிரதம ஆசிரியர், ஞானம்| சஞ்சிகை
பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள்
விருது பெற்றமைக்காக ஞானம் கலை இலக்கியப் பண்ணை நடாத்தும்
பாராட்டு விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார் ஞானம் கலை இலக்கியப் பண்ணையின் செயலாளரான ஆர். பி. ஸ்ரீதரசிங்.

நிகழ்ச்சி நிரல்

0.0.0.0.0.0.0

2 comments:
உங்கள் படங்களும்,பதிவுகளும் பசுமரத்தாணிபோல் உள்ளத்தை ஊடுருவுகின்றன.வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://www.chemamadu.com/SabaBook.aspx
Post a Comment
உங்கள் எண்ணங்கள், விமர்சனங்கள் என்னைச் சிந்திக்கத் தூண்டும்.