Saturday, December 3, 2011

அமிர்தம் மருத்துவ மாணவர்களின் இலக்கியத் தேடல் இதழ்

தமிழ் மருத்துவ மாணவர்கள் அறிவுத் தேடலுக்கு அப்பால் தமது இன, மத, பண்பாட்டு அம்சங்களில் அக்கறையும்  ஈடுபாடும் காட்டுவது மரபாக இருக்கிறது.


நான் மருத்துவ மாணவனாக காலத்தில் (1970-75) மருத்தவ பீட இந்து மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது வாராந்த வழிபாடுகளையும், வருடாந்தம் சரஸ்வதி பூசைகளை ஒழுங்கு செய்ததும் ஞாபகத்திற்கு வருகிறது.


அவ்வகையில் சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவர்கள் ஆண்டுதோறும் கலைவிழாவை நடாத்தி வருகின்றனர். இவ்வருடமும் அவ்வாறான விழா 'இந்திர விழா' என்ற பெயரில் சில காலத்திற்கு முன் நடைபெற்றது.


அதனைச் சிறப்பிக்கு முகமாக 'அமிர்தம்' என்ற மலரும் வெளியிடப்பட்டது.

நாகேந்திரம் ஹரிவல்லவன் அவர்களை இதழாசிரியாரகக் கொண்டு வெளியான இந்த மலரில் நல்ல பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்க்கது. அவற்றில் ஆன்மீகத்தை அறிவியலில் உள்வாங்கும் பாங்கு காணப்பட்டதை சிறப்பாகக் கூறிப்பிடலாம்.

  1. சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக் கழக விரிவுரையாளரான கலாநிதி சிறி பிரசாந்தன் அவர்களது 'திருக்குறளிளல் மருத்துவக் கூறுகள்' என்ற கட்டுரை முதற் கட்டுரையாக வெளியாகியுள்ளது.
  2. Telsa and Swami Vivekananda- K.Soruban
  3. பேர்மனம்- Dr.P.மனோகரன் மனத்தின் ஆற்றலை எடுத்துக் காட்டும் சிறப்பாக கட்டுரை. நாம் அதன் ஆற்றலை உணராது விரயமாக்குவதைச் சுட்டிக் காட்டி சரியான வழியில் திசை திருப்ப வழிகாட்டுகிறது. மனிதனின் மனமானது பரிணாம வளரச்சியின் உச்சத்தில் இருப்பதாகவும், இனி அதன் வளர்ச்சி மனம் சார்ந்ததாகவே இருக்கும் என Julian Huxly கூறியதை நினைவூட்டுகிறார்.
  4. நம்மைத் தேடி- நூலசிரியர் ஹரிவல்லவன்அவர்களது கட்டுரை. இனிய தமிழில் சுவைக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
  5. பிரபஞ்சமும் அனுபவமும்- சுவாமி விவேகானந்தர்.
  6. மாதவிலக்கு மதச் சடங்குகள் சில சிந்தனைகள். Dr.M.Kமுருகானந்தன்
  7. பிராண சிகிச்சை எனும் மாற்று மருத்துவ முறை- திரு.கதிர்காமராஜ்
  8. புலவர் இட்ட மாலை- கம்பவாருதி இ.ஜெயராஜ்
  9. ஆனந்த தாண்டவமிடும் நடராஜர்- Janarthani Logitharaj Lecturer Dept Microbiology
  10. அறிவுலகமும் ஆன்மீகமும் ஒன்றுபடும்- டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.
  11. அண்ணலும் அவளும்- கவிதை- பிரசன்னா வருண் லோகேந்திரன்
ஆகியவை இடம் பெற்றுள்ளன.

கட்டுரைகள் தரமானவையாக இருப்பதுடன் வாசிப்புக்கு இலகுவாகவும் இருக்கின்றன.

அட்டைப்படம் தமிழரின் கட்டிடக் கலை நுட்பத்திற்கு சான்றாக உள்ள தஞ்சைப் பெருங்கோவிலை கொண்டுள்ளது. ஆயினும் நம் நாட்டுக் கோவில் ஒன்றை அல்லது கரகம் காவடி போன்ற வழி பாட்டு முறையை சித்தரித்திருக்கலாம் என எனக்குத் தோன்றியது.



இந்த மலரை வெளியிடப் பாடுபட்டு உழைத்த இந்து மன்ற உறுப்பினர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.

0.0.00.0.0

Post Comment

3 comments:

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃநம் நாட்டுக் கோவில் ஒன்றை அல்லது கரகம் காவடி போன்ற வழி பாட்டு முறையை சித்தரித்திருக்கலாம் என எனக்குத் தோன்றியது.ஃஃஃஃ

என்னுள்ளளும் இந்த ஏக்கம் இருக்கிறது ஐயா...

கீதா said...

மாணவர்களின் இம்முயற்சி பெரும் வரவேற்பிற்கும் பாராட்டுக்கும் உரியது. தொடரட்டும் மருத்துவ சேவையோடு தமிழ்ச்சேவையும்.பகிர்வுக்கு நன்றி.

siga.lenin said...

மாணவர்களின் இம்முயற்சி பெரும் வரவேற்பிற்கும் பாராட்டுக்கும் உரியது. தொடரட்டும் மருத்துவ சேவையோடு தமிழ்ச்சேவையும்.பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்கள் என்னைச் சிந்திக்கத் தூண்டும்.