கொழும்பில் தமிழ் மாணவர்களின் கல்வித் தேவைகளுக்காக பல பாடசாலைகள் அமைந்துள்ளன. இவற்றில் சில மிகவும் பிரபல்யமானவையாகும். மிக அதிகமான எண்ணிக்கையான மாணவர்கள் இவற்றில் கல்வி பயில்கிறார்கள்.
ஆனால் இதற்கு மாறாக பல பாடசாலைகள் பற்றி அதிகம் பேசப்படாதபோதும் அவை எமது பிள்ளைகளை அரவணைத்து கல்வியூட்டி வருகின்றன.
கொழும்பு வெள்ளவத்தையில் பாமன்கடைப் பகுதியில் இயங்கி வரும் இராமகிருஷ்ண வித்தியாலயம் அதில் முக்கியமானதாகும்.1924ம் ஆண்டு மிஷனர்மாரால் ஆரம்பிக்கப்பட்டு இன்று அரசாங்க பாடசாலையாக இயங்கி வருகிறது. கடந்த 87 வருடங்களாக அமைதியாகப் பணியாற்றி வரும் இப் பாடசாலை கடந்த செப்டம்பர் மாதம் தமது வருடாந்த பரிசளிப்பு விழாவையும் கலை விழாவையும் சிறப்பாக நடாத்தியது.
அத் தருணத்தில் சுவடு 2011 என்ற மலர் வெளியீடும் நடைபெற்றது.
மலர் மறைந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுக்கு இம் மலர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வழமையான ஆசிச் செய்திகளுக்கு அப்பால் பல அறிஞர்களின் கட்டுரைகளும் மாணவர்களின ஆக்கங்களும் மலரை அலங்கரி்கின்றன.
இன்றைய தமிழ் செல்ல வேண்டிய திசையைச் சுட்டுமாப்போல கணனியும், வீணையும், கால்பந்தும் பூவுடன் இணைந்து அட்டையை அலங்கரிக்கின்றன.
பாடசாலை நிகழ்வுகள் மற்றும் பல்வேறு மன்ற உறுப்பினர்களது புகைப்படங்களும் மலரை அலங்கரி்கின்றன.
அதிபரின் அறிக்கையானது மிகுந்த ஞானம் மிக்கதாக இருக்கிறது. இன்றைய கல்வி நிலை, அதன் தேவைகள், குறைபாடுகள், பெறுபேறுகளைப் பேசுவதுடன், தமது பாடசாலையின் நிலை பற்றியும் சொல்லிச் செல்கிறது.
சிறிய பாடசாலைகள் எதிர்நோக்குகின்ற ஒரு முக்கிய பிரச்சனையை அவர் தனது கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்.
ஆம் சிறிய பாடசாலைகள் பின்தங்கிய மாணவர்களை மிகுந்த சிரமத்துடன் கற்பித்து திறமையான மாணவர்களாக பொதுப் பரீட்சைகளில் சித்தியடையச் செய்யும்போது பெரிய பாடசாலைகள் திறமையுள்ள அத்தகைய மாணவர்களை தாம் விழுங்கி ஏப்பம் விடுகி்ன்றமை ஏமாற்றமும் கவலையும் அளிப்பதுமாகவே இருக்கிறது.
மலரில் வெளியாகியுள்ள சில முக்கிய அதிதிகள் கட்டுரைகள் ஆவன,
மாணவர் ஆக்கங்கள்ஆனால் இதற்கு மாறாக பல பாடசாலைகள் பற்றி அதிகம் பேசப்படாதபோதும் அவை எமது பிள்ளைகளை அரவணைத்து கல்வியூட்டி வருகின்றன.

- பேராசிரியர் சோ.சந்திரசேகரன் - பொதுப் பரீட்சைகளும் தேசியப் பாடசாலைகளும்
- பேராசிரியர் சபா.ஜெயராசா - ஆசிரியத்துவமும் சமூக மெய்யியல் அணுகுமுறைகளும்
- கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் - கல்வியும் கல்லாமையும்
- டொக்டர்.எம்.கே.முருகானந்தன் - ஒரு வகை லோ பிரஷர் - நிலை சார்ந்த குறை இரத்த அழுத்தம்.
- தை.தனராஜ் - ஆசிரியர்களின் வாண்மைத்துவ மேம்பாடும் பொதுக் கல்வி மீதான புதிய கல்விச் சட்டமும்
- பேராசிரியர் மா.கருணாநிதி - விளை திறனுள்ள கற்றல் கற்பித்தல் ஆரம்ப நிலை பற்றிய நோக்கு
- டொக்டர்.சி.எஸ். நச்சினர்க்கினியன் - எமது மூளை அதை நான்தான் பாதுகாக்க வேண்டும்.
சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், விடுகதைகள் என மாணவச் செல்வங்களின் படைப்புகளுக்கு மலர் நிறையவே இடம் அளித்து அவர்களை ஊக்குவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சுமார் 50 பக்கங்கள் அவர்களது ஆக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மிகச் சிறப்பாக இம்மலரை தயாரித்து அளித்த மலர்க் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள் ஆவர்.
0.0.0.0.0.0.0

2 comments:
முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.
http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html
87 ஆண்டுகளாக அமைதியாகக் கல்விப்பணி ஆற்றி வரும் இராமகிருஷ்ண வித்தியாலயத்துக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். சிறிய பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனை மிகவும் தீவிரமானது. மாணவர்களின் எதிர்கால வாழ்வைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும். ஆண்டு மலரில் தங்கள் கட்டுரை வெளிவந்ததற்குப் பாராட்டுகள் டாக்டர்.
Post a Comment
உங்கள் எண்ணங்கள், விமர்சனங்கள் என்னைச் சிந்திக்கத் தூண்டும்.