Wednesday, December 14, 2011

பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருரை 2011

ஈழத்தின் பெருமையை தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் நிலைநிறுத்திய பெருமை பேராசிரியர்.க.கைலாசபதிக்கு உண்டு. கடந்த  5 - 6 தசாப்தங்களுக்கு மேலாக அவரது பெயர் தமிழ் இலக்கிய விமர்சன உலகில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அழகியலுக்கு அப்பால் சமூகப் பிரக்ஞையுடைய படைப்புகளுக்கு முக்கியத்துவமும், மார்க்சிய அடிப்படையிலான விமர்சனங்களுக்கு முன்னோடியாகவும் விளங்கியவர் அவர்.

அவர் பற்றியும் அவரது படைப்புகள், எழுதிய நூல்கள் பற்றிய விபரங்கள் தமிழ் விக்கிபீடியாவில் இவ்வாறு கூறப்படுகிறது
க. கைலாசபதி

அவர் மறைந்து 29 ஆண்டுகளுக்குப் பின்னரும் தொடர்ந்து என்றும் நினைக்கப்படுபவராக எம்மிடையே தனது ஆளுமையை நிலைநிறுத்திக் கொண்டு காலத்தோடு இணைந்து நடக்கிறார்.


கடந்த பல வருடங்களாக இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் கைலாசபதி நினைவுக் குழுவுடன் இணைந்து கைலாசபதி நினைவுப் பேருரைகளை நடாத்தி வருகிறது.

இவ்வாண்டிற்கான நினைவுப் பேருரை எதிர்வரும் மார்கழி 18ம் திகதி 2011 ல் ஞாயிறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் ஆதரவில் வெள்ளவத்தை தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.



தலைமை:- திரு.எம்.வாமதேவன் (முன்னாள் செயலாளர் தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு)

பேருரை:- திரு.ஏ.எஸ்.சந்திரபோஸ் (சிரேஷ்ட விரிவுரையாளர் இலங்கை திறந்த பல்கலைக் கழகம்)


குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் எனவும் அனைவரையும் அன்புடன் அழைப்பதாகவும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

சென்ற ஆண்டிற்கான நினைவுப் பேருரை கொழும்பு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் அவரது மகளான கலாநிதி பவித்ரா கைலாசபதி அவர்களால் ஆற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதற்கான இணைப்பு


கணவன் மனைவி இருவரும் உழைக்கும் குடும்பத்தில் நன்மைகள் பிரச்சனைகள்.- கைலாசபதி நினைவுப் பேருரையில்

பேராசிரியர் கைலாசபதி பற்றி திரு லெனின் மதிவானம் எழுதிய 'பேராசிரியர் க.கைலாசபதி சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்'என்ற நூல் வெளியீடு பற்றி இணைப்பு

பேராசிரியர் க.கைலாசபதி சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்

0.00.0.00.0

Post Comment

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

நிறைய தகவல்கள் அறியத்தந்த பகிர்வுக்கு
நன்றி ஐயா..

இராஜராஜேஸ்வரி said...

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்கள் என்னைச் சிந்திக்கத் தூண்டும்.