தினக்குரல் தனது பத்திரிகையில் இணைக்கும் வழமையான அனுபந்தங்களுடன் இன்று புதிதாக 'டிஜிட்டல் யுகம்' என்பதை வெளியிட்டுள்ளது.
இதில் எனது வலைப்பதிவு அனுபவங்கள் பற்றிய சுருக்கமான நேர்காணலை இணைத்துள்ளார்கள்.
'கண்டங்களை தாண்டிய வாசகர்களைக் கூட சில நிமிடங்களுக்குள் அடைய முடிகிறது' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
இதில் எனது 5 வலைப்புக்களையும் படங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
முழுமையான நேர்காணல்
கணனியை காணாத கிடைக்காத போர்பிரதேசத்தில் 1996 வரை வாழ்ந்ததால் அதில் ஒரு அபரிதமான மோகம் இருந்தது. அதனால் கொழும்பு வந்ததும் கணனியை வாங்கி அதில் தட்டுத்தடுமாறி கீபோட் கொண்டு சுயமாக எழுதப் பழகினேன். பின் நோயாளர்களின் விபரங்களைப் பேணுவதற்காக கணனியை நான் உபயோகிக்கத் தொடங்கியபோது இலங்கையில் அவ்வாறு பேணுவதில்; ஒரு முன்னோடியாக இருந்தேன் எனலாம்.
தொடர்ந்து தமிழில் கீபோட்டில் மிகச் சிரமத்துடன் பாமினி பொன்டில் எழுதப் பழக நேர்ந்தது. பதிவுகள் இணைய இதழுக்காக மருத்துவ இலக்கிய கட்டுரைகளை எழுதுவதற்கு அது அவசியமாக இருந்தது. இது சுமார் 10-12 வருடங்களுக்கு முன்னராகும்.
இவ்வாறு கணனியிலும் இணையத்திலும் எழுதி வந்தபோதும் வலைப்பதிவளானக வேண்டும் என்ற சிந்தனை இருக்கவேயில்லை. ஆனால் அதற்கான ஆர்வத்தை தூண்டிவிட்டது நண்பர் மேமன் கவிதான்.
மருத்துவனான எனக்கு கணனி ஒரு சாவாலாகவே இருந்தது. வலைத்தளத்தை அமைப்பது எப்படி என்று தெரியாத நிலையில் வலையில் தேடிதேடி வாசித்துக் கற்றே முதலாவதை கற்றுக்குட்டி போல அமைக்க முடிந்தது.
படிப்படியாக அதை அழகுபடுத்தவும், விளக்கப் படங்களுடன் தெளிவாக்கவும் கற்றுக் கொண்டேன். இப்பொழுதும் வலைப் பதிவு சம்பந்தமாகக் பல புதிய விடயங்களை வலையிலேயே கற்று என்னை முன்னேற்ற முயல்கிறேன்.
ஆனால் அடிப்படைக் கணனி அறிவு எனக்கு இல்லாதது ஒரு குறையாகவே படுகிறது. நான் ஆரம்பத்தில் blogspot.com வைப் பயன்படுத்தினேன். இப்பொழுது wordpress.com லும் எழுதுகிறேன். இவை இரண்டுமே அதிக கணனி அறிவு இல்லாதவர்களும் இலகுவாக தமக்கென சுலபமாக வலைப் பதிவுகளை (புளக்) அமைக்க கை கொடுக்கின்றன.
அவற்றின் தளத்திற்கு சென்றால் படிமுறையாக புளக் அமைக்க வழி காட்டுகின்றன. ஆங்கில அறிவு அதிகம் இல்லாதவர்கள் தமிழிலும் செய்யக் கூடியதாக இவை அண்மைக்காலமாக தமிழிலும் கிடைப்பது மற்றொரு சிறப்பாகும்.
Keyman மென்பொருளை உபயோகிப்பதால் பாமினியில் டைப் பண்ணுவதுபோலவே டைப் பண்ண முடிகிறது. அது எனக்குச் சிரமமாக இருக்கவில்லை.
3. உங்களுடைய தொழில் மற்றும் பத்திரிகைகளுக்கு எழுதுவது என்பவற்றுக்கு மத்தியிலும், இவ்வாறு ஐந்து வௌ;வேறான வலைத்தளங்களை வைத்து உங்களால் எவ்வாறு பராமரிக்க முடிகின்றது. அதற்கான நேரத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வீர்கள்?
வலைத்தளத்திற்கு என நான் தனியாக எழுதுவது குறைவு. எற்கனவே பத்திரிகை சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகளையே வலைத்தளத்தில் பகிர்கிறேன்.
இருந்தபோதும் பல வலைப் பதிவாளர்கள் போல என்னால் தினமும் பதிவேற்ற முடியவதில்லை. வாரத்திற்கு ஒரு முறையாவது மருத்துவப் பதிவு ஒன்றையும், இலக்கிய படைப்பு ஒன்றையும் பகிர முயல்கிறேன். பெரும்பாலும் இரவில் நேரங்கெட்ட நேரம்வரை முழித்திருந்தே இவற்றைச் செய்ய நேர்கிறது.
4. இவ்வாறான வலைப்பதிவுகளை மேற்கௌ;வதன் மூலமாக எவ்வாறான நன்மைகளை நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கின்றீர்கள்? அதாவது இதன் மூலமாக உங்களுக்குக் கிடைத்த பலன்தான் என்ன?
வயது என்பது புதிய தொழில் நுட்பங்களைக் கற்கவும் பயன்படுத்தவும் தடையாக இருக்கக் கூடாது. அதைத் தாண்ட வேண்டும் என்ற சவாலை எதிர்கொள்வதே எனது முதல் இலக்காக இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல எனது மருத்துவ அறிவை பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு அப்பால் ஒரு பரந்த தளத்திற்கு நகர்த்த வேண்டும் என்ற அவாவை நிறைவேற்றிய திருப்தி கிட்டியது.
கண்டங்களைத் தாண்டிய வாசகர்களைக் கூட சில நிமிடங்களுக்குள் அடைய முடிவதும், அவர்களது விமர்சனங்களையும் கருத்துகளையும் உடனடியாகவே பெற முடிவதும் மகிவும் மகிழ்சி அளிப்பதாகும். பல பழைய நட்புக்களைப் புதிப்பிக்கவும், புதிய நட்புகளை பெற முடிவதும் உற்சாகம் அளிக்கிறது.
எனது படைப்புகளை பலர் வௌ;வேறு தளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் இன்னமும் பரவலாக வாசிக்கப்படுகிறது. இவற்றால் எழுத்தளான் என்ற முறையில் கிட்டும் ஆத்ம திருப்தியைத் தவிர வேறு என்ன கிடைக்க முடியும்.
5. தமிழில் வலைப் பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கு நீங்கள் சொல்லக் கூடிய ஆலோசனை என்ன?
தெளிவான இலக்குகளுடன் பதிவிட வேண்டும். யாருக்காக எழுதப் போகிறேன், எவ்வாறு எழுதப் போகிறேன் எனத் தெளிவுடன் எழுத வேண்டும்.
எதை வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் யாருக்காவது பயன்படுவதாக இருக்க வேண்டும். சீரியசான விடயமாகத்தான் எழுத வேண்டும் என்றில்லை. சற்று ரிலக்ஸ்சாக மற்றவர்களுடன் பொழுதுபோக்கிறாக எழுதுவதாலும் இருப்பதில் தவறில்லை.
மற்றவர்களைக் கவரும் விதத்தில் எழுதுவது அவசியம். சிலரது தலைப்பு மட்டுமே கவர்ச்சியாக இருக்கும் உள்ளடக்கம் சப்பென்று இருக்கும். அவ்வாறான எழுத்துகளால் வாசகர்களைத் தக்க வைத்திருக்க முயடிhது.

1.கடந்த வருடத்தின் சிறந்த தமிழ் வலைப்பதிவாளராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தீர்கள். அத்துடன் 5 வலைப்பதிவுகளையும் நீங்கள் மேற்கொண்டுவருகின்றீர்கள். ஒரு மருத்துவராகவும், எழுத்தாளராகவும் உள்ள நீங்கள் வலைப்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று எவ்வாறு ஈர்க்கப்பட்டீர்கள்?
கணனியை காணாத கிடைக்காத போர்பிரதேசத்தில் 1996 வரை வாழ்ந்ததால் அதில் ஒரு அபரிதமான மோகம் இருந்தது. அதனால் கொழும்பு வந்ததும் கணனியை வாங்கி அதில் தட்டுத்தடுமாறி கீபோட் கொண்டு சுயமாக எழுதப் பழகினேன். பின் நோயாளர்களின் விபரங்களைப் பேணுவதற்காக கணனியை நான் உபயோகிக்கத் தொடங்கியபோது இலங்கையில் அவ்வாறு பேணுவதில்; ஒரு முன்னோடியாக இருந்தேன் எனலாம்.
தொடர்ந்து தமிழில் கீபோட்டில் மிகச் சிரமத்துடன் பாமினி பொன்டில் எழுதப் பழக நேர்ந்தது. பதிவுகள் இணைய இதழுக்காக மருத்துவ இலக்கிய கட்டுரைகளை எழுதுவதற்கு அது அவசியமாக இருந்தது. இது சுமார் 10-12 வருடங்களுக்கு முன்னராகும்.
இவ்வாறு கணனியிலும் இணையத்திலும் எழுதி வந்தபோதும் வலைப்பதிவளானக வேண்டும் என்ற சிந்தனை இருக்கவேயில்லை. ஆனால் அதற்கான ஆர்வத்தை தூண்டிவிட்டது நண்பர் மேமன் கவிதான்.
2. வலைப்பதிவை மேற்கொள்ளும் ஒரு எழுத்தாளர் எதிர்கொள்ளம் முக்கியமான பிரச்சினையாக இருப்பது தொழில்நுட்பப் பிரச்சினை. குறிப்பாக வலைத்தளத்தை அமைத்துக்கொள்வது பதிவேற்றம் செய்வது, தமிழ் யுனிகோட் எழுத்துருவைப் பயன்படுத்துவது என்பவையே அவை. இந்தப் பிரச்சினைகளை நீங்கள் எவ்வாறு வெற்றிகொண்டீர்கள்?
மருத்துவனான எனக்கு கணனி ஒரு சாவாலாகவே இருந்தது. வலைத்தளத்தை அமைப்பது எப்படி என்று தெரியாத நிலையில் வலையில் தேடிதேடி வாசித்துக் கற்றே முதலாவதை கற்றுக்குட்டி போல அமைக்க முடிந்தது.
படிப்படியாக அதை அழகுபடுத்தவும், விளக்கப் படங்களுடன் தெளிவாக்கவும் கற்றுக் கொண்டேன். இப்பொழுதும் வலைப் பதிவு சம்பந்தமாகக் பல புதிய விடயங்களை வலையிலேயே கற்று என்னை முன்னேற்ற முயல்கிறேன்.
ஆனால் அடிப்படைக் கணனி அறிவு எனக்கு இல்லாதது ஒரு குறையாகவே படுகிறது. நான் ஆரம்பத்தில் blogspot.com வைப் பயன்படுத்தினேன். இப்பொழுது wordpress.com லும் எழுதுகிறேன். இவை இரண்டுமே அதிக கணனி அறிவு இல்லாதவர்களும் இலகுவாக தமக்கென சுலபமாக வலைப் பதிவுகளை (புளக்) அமைக்க கை கொடுக்கின்றன.
அவற்றின் தளத்திற்கு சென்றால் படிமுறையாக புளக் அமைக்க வழி காட்டுகின்றன. ஆங்கில அறிவு அதிகம் இல்லாதவர்கள் தமிழிலும் செய்யக் கூடியதாக இவை அண்மைக்காலமாக தமிழிலும் கிடைப்பது மற்றொரு சிறப்பாகும்.
Keyman மென்பொருளை உபயோகிப்பதால் பாமினியில் டைப் பண்ணுவதுபோலவே டைப் பண்ண முடிகிறது. அது எனக்குச் சிரமமாக இருக்கவில்லை.
3. உங்களுடைய தொழில் மற்றும் பத்திரிகைகளுக்கு எழுதுவது என்பவற்றுக்கு மத்தியிலும், இவ்வாறு ஐந்து வௌ;வேறான வலைத்தளங்களை வைத்து உங்களால் எவ்வாறு பராமரிக்க முடிகின்றது. அதற்கான நேரத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வீர்கள்?
- முதலில் எனது சினிமா விமர்சனங்கள் இலக்கிய கட்டுரைகளை பகிர்வதற்காக மறந்து போகாத சிலஆரம்பித்தேன்.
- ஹாய் நலமா?என மருத்துக் கட்டுரைகளை தினக்குரலில் கீலமாக (பத்தி) எழுத ஆரம்பித்ததும் அதே தலைப்பில் வலைப்பதிவை ஆரம்பிக்க நேர்ந்தது.
- இவ்வாறே மருத்துவ அனுபவங்களைப் பகிர Steth இன் குரல்
- எனது ஆரம்பப் பாடசலைக்கான மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம் என ஆரம்பித்து,
- எல்லாவற்றையும் இணைக்கும் முருகானந்தன் கிளினிக்
- சில தினங்களுக்கு முன் புகைப்படங்களைப் பகிர முருகானந்தன் கிளிக்குகள் எனத் தொடர்கிறேன்.
வலைத்தளத்திற்கு என நான் தனியாக எழுதுவது குறைவு. எற்கனவே பத்திரிகை சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகளையே வலைத்தளத்தில் பகிர்கிறேன்.
இருந்தபோதும் பல வலைப் பதிவாளர்கள் போல என்னால் தினமும் பதிவேற்ற முடியவதில்லை. வாரத்திற்கு ஒரு முறையாவது மருத்துவப் பதிவு ஒன்றையும், இலக்கிய படைப்பு ஒன்றையும் பகிர முயல்கிறேன். பெரும்பாலும் இரவில் நேரங்கெட்ட நேரம்வரை முழித்திருந்தே இவற்றைச் செய்ய நேர்கிறது.
4. இவ்வாறான வலைப்பதிவுகளை மேற்கௌ;வதன் மூலமாக எவ்வாறான நன்மைகளை நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கின்றீர்கள்? அதாவது இதன் மூலமாக உங்களுக்குக் கிடைத்த பலன்தான் என்ன?
வயது என்பது புதிய தொழில் நுட்பங்களைக் கற்கவும் பயன்படுத்தவும் தடையாக இருக்கக் கூடாது. அதைத் தாண்ட வேண்டும் என்ற சவாலை எதிர்கொள்வதே எனது முதல் இலக்காக இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல எனது மருத்துவ அறிவை பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு அப்பால் ஒரு பரந்த தளத்திற்கு நகர்த்த வேண்டும் என்ற அவாவை நிறைவேற்றிய திருப்தி கிட்டியது.
கண்டங்களைத் தாண்டிய வாசகர்களைக் கூட சில நிமிடங்களுக்குள் அடைய முடிவதும், அவர்களது விமர்சனங்களையும் கருத்துகளையும் உடனடியாகவே பெற முடிவதும் மகிவும் மகிழ்சி அளிப்பதாகும். பல பழைய நட்புக்களைப் புதிப்பிக்கவும், புதிய நட்புகளை பெற முடிவதும் உற்சாகம் அளிக்கிறது.
எனது படைப்புகளை பலர் வௌ;வேறு தளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் இன்னமும் பரவலாக வாசிக்கப்படுகிறது. இவற்றால் எழுத்தளான் என்ற முறையில் கிட்டும் ஆத்ம திருப்தியைத் தவிர வேறு என்ன கிடைக்க முடியும்.
5. தமிழில் வலைப் பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கு நீங்கள் சொல்லக் கூடிய ஆலோசனை என்ன?
தெளிவான இலக்குகளுடன் பதிவிட வேண்டும். யாருக்காக எழுதப் போகிறேன், எவ்வாறு எழுதப் போகிறேன் எனத் தெளிவுடன் எழுத வேண்டும்.
எதை வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் யாருக்காவது பயன்படுவதாக இருக்க வேண்டும். சீரியசான விடயமாகத்தான் எழுத வேண்டும் என்றில்லை. சற்று ரிலக்ஸ்சாக மற்றவர்களுடன் பொழுதுபோக்கிறாக எழுதுவதாலும் இருப்பதில் தவறில்லை.
மற்றவர்களைக் கவரும் விதத்தில் எழுதுவது அவசியம். சிலரது தலைப்பு மட்டுமே கவர்ச்சியாக இருக்கும் உள்ளடக்கம் சப்பென்று இருக்கும். அவ்வாறான எழுத்துகளால் வாசகர்களைத் தக்க வைத்திருக்க முயடிhது.
0.0.0.0.0.0.0

0 comments:
Post a Comment
உங்கள் எண்ணங்கள், விமர்சனங்கள் என்னைச் சிந்திக்கத் தூண்டும்.