Monday, October 31, 2011

அக்டோபர் புரட்சி நினைவாக பேருரை நூல் வெளியீடு

அக்டோபர் புரட்சி பற்றி அறியாத முற்போக்குக் கருத்துடையோர் இருக்க முடியாது. இது ரஷ்யப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும்.1917ம் ஆண்டில் நடந்தது. இரண்டாவது அக்டோபரில் நிறைவுற்றது. முதலாவது 1917 பெப்ரவரியில் நிகழ்ந்தது.

மார்க்ஸின் கருத்துக்களின் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாவது பொதுவுடைமைப் புரட்சி இதுவாகும். 1922ல் சோவியத் ஒன்றியம் உருவாவதற்கு முன்னோடியாக அமைந்தது இதுவெனலாம்.

இந்த மகத்தான நிகழ்வின் நினைவாக இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் பேருரையும் நூல் வெளியீடும் செய்வதற்கு ஒழுங்கு செய்திருப்பதாக அறியத் தந்திருக்கிறார்கள்.


எதிர்வரும் நவம்பர் 6ம் திகதி 2011 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு  வெள்ளவத்தை 58, தர்மரா வீதியில் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் நடைபெற உள்ளது


தலைமை:-  திரு.பி.பி.தேவராஜ்.

பேருரை:- செல்வி திருச்சந்திரன்

பொருள்:- அக்டோபர் புரட்சி- பெண்களின் பங்களிப்பு - பெண்கள் மீது புரட்சியின் தாக்கம்.

நூல்:- வடபுலத்தில் இடதுசாரி முன்னோடிகள்

நூல் வெளியீட்டுரை:- பேராசிரியர்.சி.தில்லைநாதன்.



நூலில் அடங்கியுள்ள படைப்புகள் ஆவன

  1.  மு.கார்த்திகேசு -  சண்முகம் சுப்பிரமணியம்(கனடா)
  2. ஹன்டி பேரின்பநாயகம் - சபா.ஜெயராசா
  3. அ.வைத்திலிங்கம் - இராமச்சந்திரா
  4. ஐ.ஆர்.அரியரட்ணம் - நீர்வை பொன்னையன்
  5. M.C.சுப்பிரமணியம் - வீ.சின்னத்தம்பி
  6. டொக்டர்.சீனிவாசகம் - நீர்வை பொன்னையன்
  7. இராமசாமி ஐணர் - நீர்வை பொன்னையன்
  8. S.K.கந்தையா - த.ந.பஞ்சாட்சரம்
  9. பூபாலசிங்கம் - சிவா சுப்பிரமணியம்
  10. அப்துல் காதர் - M.G.பசீர்
  11. ஜெயம் தர்மகுலசிங்கம் - C.தர்மராசன்
  12. பொன் கந்தையா - M.குமாரசாமி
கூட்ட ஒழுங்கமைப்பு


அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

0.0.0.0.0.0.0


Post Comment

0 comments:

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்கள் என்னைச் சிந்திக்கத் தூண்டும்.