இது எமது இனிய நண்பர் கே.எஸ்.சிவகுமாரன்
அவர்களின் பவளவிழா ஆண்டு.
01.10.2011 ல் அவர் தனது 75 வயதில்
காலடி எடுத்து வைக்கிறார்.
எல்லோர்க்கும் இனியவர் சிவகுமாரன்
என்றும் அவர் இளங்குமரன்
எதிரிக்கும் மங்காத புன்னகை
அவரது ஆயுதம்.
பூவிற்கும் நோகாத மென்மை
எழுத்திலும்..
மென்மையை நோகடிக்கும்
உள்ளத்தின் மென்மை.
படைப்பினைக் கொல்லாத
பதமான விமர்சனம்
பிறமொழிப் புத்தாக்கங்களை
தமிழுக்குப் பரிமாறும் வித்தையில் வல்லவன்.
சீரிய சினமா இதுவெனக் காட்டியவர்
சினமா ரசனையைச் சிக்கெனப் புகட்டியவர்
சினமா பார்க்கச் சென்னைக்கும் பறப்பவர்.
நீண்டு நிறையணும் அவரது வாழ்வு
நாளும் ஒளிவிளக்காக
வழிகாட்டணும் எமக்கெல்லாம்
வாழி வாழி.
பவளவிழா நாயகனுக்கு வாழ்த்துக்கள்.
சரியாகப் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் 2001 ல் அவரது அசையும் படிமங்கள் என்ற சினிமா பற்றிய நூல் வெளிவந்தது. அந்தக் கூட்டத்தில் நான் ஆற்றிய உரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
அண்மையில் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் எழுதிய அசையும் படிமங்கள் என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட மூத்த எழுத்தாளரான கே.எஸ்.சிவகுமாரனின் 13வது நூல்.
இந்த நூல் வெளியீடு இலங்கை இலக்கிய உலகைப் பொறுத்தவரையில் ஒரு மிக முக்கியமான நிகழ்வு என்று கருதுகிறேன். ஏனெனில் இது ஒரு முன்னோடி நிகழ்வு. ஈழத்து இலக்கியப் பரப்பில் புதிய துறை சார்ந்த நூல். நிறைந்த தகவல்களுடன், நுணுக்கமும் பரந்த தேடலும் கொண்ட ஒருவரின் பல்லாண்டு கால முயற்சிகளின் அறுவடையாக மலர்ந்துள்ளது.
இலங்கையைப் பொறுத்த வரையில் சினிமா சம்பந்தமான நூல்களின் வரவு இல்லையென்று சொல்லுமளவிற்கு குறைவாகவே இருக்கிறது. தம்பியையா தேவதாஸ் எழுதிய இலங்கைத் தமிழ்ச் சினிமா, சிங்களச் சினிமா பற்றிய இரு நூல்கள் தவிர வேறு எதுவும் வந்ததாக ஞாபகத்தில் இல்லை. இவை இரண்டும் முக்கியமாக வரலாற்று ஆவணங்கள் போன்றவை. பேராசிரியர் சிவத்தம்பி எழுதிய தமிழ்ச் சமூகமும் சினிமாவும் என்ற நூல் சினிமா, தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய சமூக ஆய்வியல் நூல். சில்லையூர் செல்வராஜனின் தணியாத தாகம் திரைப்படச் சுவடி.
கே.எஸ்.சிவகுமாரன் அவர்களது நூல் அவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. திரைப்படக் கலை, அதனை அறிவு பூர்வமாக நுகர்தல், அதன் தயாரிப்பில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் திரைப்படத் திறனாய்வு பற்றிய முன்னோடி நூல் என்பதில் இரு கருத்துக்கள் இருக்க முடியாது. இது திரைப்படக்கலை பற்றிய நுணுக்கமான தரவுகள் கொண்ட நூலாக இருப்பதுடன் திரைப்படத் திறனாய்வையும் உள்ளடக்கியுள்ளது. அத்துடன் திரைப்படக் கலையின் உலகளாவிய ரீதியான வளர்ச்சியின் சரித்திரம் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
இலங்கையில் திரைப்படம் பற்றிய நூல்கள் இல்லாதிருப்பது மட்டுமின்றி திரைப்படங்கள் பற்றிய நல்ல ஆரோக்கியமான கட்டுரைகளும் வெளிவருவதில்லை. வாராவாரம் பத்திரிகைகளில் வெளிவரும் திரைப்படம் பற்றிய கவர்ச்சியான பக்கங்களை இங்கு குறிப்பிட முடியாது. அவை திரைப்படம் பற்றிய செய்திகளையும், நடிக நடிகர் பற்றிய கிசுகிசுக்களையும், மலினமான விமர்சனங்களையும் வெளியிடுகின்றனவே அல்லாமல் திரைப்படத்தை ஒரு கலையாகப் பார்ப்பது இல்லை. சினிமா என்பது வெறும் பொழுது போக்கு என்ற எண்ணமும், ஜனரஞ்சகத் தன்மை கொண்ட பொழுதுபோக்கு ஊடகம்; என்ற பார்வையும்தான் உண்டு.
சினிமா என்ற காத்திரமான கலை பற்றிய தெளிவான உணர்வு கிடையாது. அதனுடைய கலை அம்சம் பற்றிய அக்கறையும் கிடையாது.
உண்மையில் சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம். ஓவ்வொரு படமும் ஆயிரக்கணக்கான பிரேம்களைக் கொண்டது. அது ஒரு தனிமனித முயற்சி அல்ல. கதை, கட்டுரை, போட்டோ, ஓவியம் போல ஒரு தனிக் கலைஞனின் படைப்பும் அல்ல. ஆயிரக் கணக்கானவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியில் உருவாவது.
அதில் நம்பத்தகுந்த இயல்பான கதை இருக்க வேண்டும், ஒவ்வொரு பாத்திரமும் தனித்துவமாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும். இயல்பான நடிப்பு, காட்சிகளோடு இசைந்து செல்லும் பின்னணி இசை இருக்க வேண்டும். வசனங்களால் அன்றி நுணுக்கமான காட்சிப்படுத்தும் பண்பினால் படம் நகர்த்தப்பட வேண்டும். அதன் தயாரிப்பிற்கு இத்தகைய விடயங்கள் பற்றிய அறிவு தேவை. அதை ரசிப்பதற்கும் எமக்கு சில அடிப்படை அறிவு தேவை. இந்நூல் அதனை எமக்கு வழங்குகிறது.
ஏன் பெரும்பாலான தமிழ் இயக்குனர்களுக்கும், திரைப்படக் கலைஞர்களுக்கும் கூட இக்கலை பற்றிய ஆழ்ந்த அறிவு கிடையாது. அந்த ஊடகத்தின் தனித்துவமான இயல்புகள் பற்றிய தெளிவு கிடையாது. இப்பொழுதுதான் திரைப்படக் கல்லூயில் படித்த பாலு மகேந்திரா, நாஸர், பார்;திபன், போன்ற சில கலைஞர்களின் பங்களிப்பு தமிழ்ச் சினிமாவிற்குக் கிடைத்து வருகிறது. ஏனையவர்களுக்கு நாடகம், சினிமா ஆகிய இரண்டு ஊடகங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் தெளிவாகப் புலப்படுவதில்லை. இதற்குக் காரணம் தமிழ்ச் சினிமாவின் ஆரம்பமே நாடகத்தின் மறுவார்ப்பாக இருந்ததுதான்.
ஆனால் சினிமாவின் ஆரம்பமான மேற்குலகில் சினிமா என்பது ஒரு வித்தியாசமான மொழி என்ற உணர்வு ஆரம்பம் முதல் இருந்திருக்கிறது
பிரான்ஸ் தேசத்து லூமினர் சகோதரர்கள் சிடைட்டோகிராப் என்ற கருவியைக் கண்டுபிடிததனர். இக் கருவி மூலம் முதல் சலனப் படிமம் உருவாகியது. 1895 ம் ஆண்டு இவர்கள் பாரிஸில் தமது முதல் படத்தைக் காட்டியதாக வரலாறு கூறுகிறது. முதல் படம் ஓரிரு நிமிடம் மட்டும் ஓடிய குறும் திரைப்படம் அல்லது சினிமாத் துணுக்கு. அது ரயில் வரும் காட்சி. ஒருசில நிமிடங்களில் ஒரு ரயில் வண்டி ஓடி வரும் காட்சி. அசுரத்தனமான புகை வண்டி. புகை கக்கிக் கொண்டு ஓடிவருகிறது.. இது நாடக மேடையில் காணக் கிடைக்காத, நாடக மேடையில் பார்க்க முடியாத காட்சி. அது காட்டப்பட்ட அந்தக் கணத்தில் ரயில் வண்டி தம்மை நோக்கித்தான் வருவதாக மக்கள் அதிர்ச்சி அடைந்து ஓடினார்களாம்.
நான் பார்க்கவில்லை.
வெங்கட் சாமிநாதன் எழுதியுள்ளார். முதல் படத்திலேயே சொல்லப்பட்ட விடயமும் புதிது, சொல்லப்பட்ட முறையும் புதிதாக இருந்தது. ஆரப்பத்திலேயே புதிய ஊடகத்தின் குணம் அந்தக் கலைஞனுக்குப் பிடிபட்டுவிட்டது.
ஆனால் தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் பவளக்கொடி, சங்கரதாஸ் சுவாமிகள் மேடையில் காட்டியதையே திரைக்கும் கொண்டு வந்தார்கள். நாடகக் காட்சிகளை அப்படியே படமாக்கினார்கள். இன்றுவரை நாடகத்தின் தாக்கத்திலிருந்து விடுபடுவது முடியாதிருக்கிறது. காரணம் திரைப்படக் கலை பற்றிய அறிவும் தெளிவும் அவர்களுக்கு எட்டாததாகவே இருந்திருக்கிறது. இந்நூல் அத் தெளிவை வழங்குகிறது.
திரைப்படக்கலை பற்றிய நூல்கள் இல்லாதிருப்பது ஒருபுறமிருக்க, இலங்கைப் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் சினிமா என்ற ஊடகம் பற்றிய தெளிவான அறிவோடு எழுதியவர்கள் பேசியவர்களின் எண்ணிக்கையை ஒரு கை விரலுக்குள் அடக்கிவிடலாம். இவர்களில் முன்னோடியும் முக்கியமானவரும் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள்தான். அ.ஜேசுராஜா, உமா வரதராஜன், ரஞ்சகுமார், மற்றும் மறைந்து விட்ட சசி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மட்டுமே ஞாபகத்திற்கு வருகிறார்கள்.
ஆயினும் இவர்களுள் முன்னோடி கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள்தான். தன்னந்தனியனாக 45 ஆண்டுகளுக்கு முன் அவர் ஆரம்பித்த திரைப்படத் திறனாய்வுப் பணியை ஆரம்பித்தார். அவரது பணி காரணமாகவே நல்ல சினிமா என்றால் என்ன? அதனுடைய அம்சங்கள் அவை? அவற்றை நாம் எப்படி இரசிக்க வேண்டும் போன்ற விடயங்களை இலங்கையில் நல்ல வாசகர்களிடையே ஏற்படுத்த முடிந்தது. இன்று முன்னோடியும் முக்கியமானவருமான கே.எஸ்.சிவகுமாரன் அவர்களது பல்லாண்டு காலப் பணியின் ஒரு துளி இந்த நூலாக வருகிறது.
அவரே கூறியபடி இது திரைப்படக் கலையின் இலக்கணம் பற்றிய நூல். அவர் பார்த்த திரைப்படங்கள், பிறமொழிப்படங்களின் மதிப்பீடுகள், ஏனைய கட்டுரைகள் பின்னர் இன்னுமொரு நூலாக வரும். அதன் வெளியீடு நாம் இந்த நூலுக்குக் கொடுக்கிற ஆதரவில் தங்கியிருக்கறது என்று நாம் மனங் கொள்ளலாம்.
அவர்தான் திரைப்படத் திறனாய்வுத் துறையில் தங்கள் முன்னோடி என்பதை திரைப்படக் கலையில் அக்கறை காட்டிய பலரும் எடுத்துக் கூறியுள்ளார்கள்.
அ.யேசுராஜா- "இளமைக்காலத்தில் எங்களுடைய திரைப்ப ரசனை சரியாக வடிவமைக்கப்பட்டிருக்வில்லை. 65,66ம் ஆண்டுகளில் தினகரன் வாரமஞ்சரியில் மனத்திரை என்ற பத்தியை கே.எஸ்.சிவகுமாரன் எழுதி வந்தார்.அதில் சர்வதேச நாடுகளின் பிறமொழித் தரைப்பட விழாக்கள் பற்றி, முக்கியமான திரைப்படங்கள் பற்றி, சிங்கள் நாடகங்கள் பற்றி எல்லாம் எழுதி வந்தார். ...
..அவ்வாறு பார்க்கையில் தமிழ்ப்படங்கள் தொடர்பாக அவற்றினுடைய பலவீனங்கள், யதார்த்தமற்ற போக்குகள் பற்றிய குற்றச்சாட்டுகளை அவர் முன்கொண்டு வந்தார். உண்மையில் நான் கொண்டிருந்த ரசனையில் குறைபாடுகள் இருக்கின்றன என யோசிக்க வேண்டிய முதலாவது அனுபவம் மனத்திரை என்ற பத்தியினூடாகத்தான ஏற்படுகிறது."
யேசுராஜா போன்ற தரமான இலக்கியகர்த்தாக்களின் ரசனையை வளர்பதற்கு அவரது பத்தி எழுத்துக்கள் உதவியுள்ளன என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
இன்னுமொரு இடத்தில் ஜேசுராசா இவ்வாறு எழுதுகிறார். ஷ 68ம் ஆண்டில் கே.எஸ்.சிவகுமாரனைத் தற்செயலாகச் சந்தித்தபொழுது பிரஞ்சுத் திரைப்பட விழா நடப்பது பற்றியும் அதனைப் பார்க்கும் படியும் சொன்னார். தனது பத்தி எழுத்துக்கள் ஊடாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும், நண்பர்களிடையேயும் சினிமா ரசனையை வளர்க்க அவர் எடுத்த ஆரம்ப கால முயற்சிகளை இது எடுத்துக்காட்டுகிறது.
எஸ்.ரஞ்சகுமார்- நல்ல சினிமா என்றால் என்ன? அதன் குணாதிசியங்கள் எவை? ஏன்பன போன்ற விடயங்களை அவர் தமிழ் சமூகத்திற்கு எடுத்துக் கூற ஆரம்பித்தார். நல்ல சினிமாக்களை அவர் சுருக்கமாகவும் தெளிவாகவும் தனது பத்திகளில் அறிமுகப்படுத்தினார். துன்னந்தனியனாக இப்பணியை பல ஆண்டுகளாக ஆற்றி வந்தார். சுpனிமாவி மிக ஆர்வம் காட்டிய அ.ஜேசுராஜா, சசி கிருஷ்ணமூர்த்தி, உமா வரதராஜன் போன்றோருடன் நானும், பிறரும் அவரது விரல் சுட்டிக் காட்டிய வழியில் பயணித்தவர்களே.
திசை, அலை, சரிநிகர், மூன்றாவது மனிதன் போன்ற சஞ்சிகைகள் தரைப்படக் கலைபற்றிய உணர்வை வாசகர்களிடையே ஏற்படுத்த சில முயற்சிகள் எடுத்துள்ளன. வீரகேசரி, தினகரன் ஆகியவற்றின் ஞாயிறு இதழ்களிலும் மல்லிகை சஞ்சிகை ஆகியவற்றிலும் கே.எஸ்.சிவகுமாரனின் சில நல்ல கட்டுரைகள் வெளிவந்திருப்பதை இந்த நூல் மூலம் நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

நூலின் பயன்பாடு
1. திரைப்படம் பார்க்கும் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது. அவரே பக்கம் 29ல் கூறுவது போல படத்தைப் காண்பது ஒன்று. அதனைப் பிரக்ஞையுடன் நுகர்வது மற்றொன்று. ஒரு திரைப்படததை சரியான முறையில் நுகர்வதற்கான வழிகாட்டி இந்நூல். நூல் முழுவதும் இது பற்றிப் பேசப்பட்டாலும் ஷஒரு திரைப்படத்தை எவ்வாறு நுகர்வது?' என்ற தனிக்கட்டுரையும் உண்டு.
2. திரைப் படங்களை திறனாய்வு செய்யும், செய்ய விரும்புபவர்களுக்கு கை நூலாக உதவக் கூடியது. இந்நூலில் உள்ள 22 கட்டுரைகளில் குறைந்தது 5 கட்டுரைகள் திரைப்படத் திறனாய்வு பற்றிப் பேசுகின்றன.
3. திரைப்படக் கலை பற்றியும். அதன் அணுகுமுறை பற்றியும் அறிய விரும்பும் கலைஞர்களுக்கும் வருங்காலத்தில் அவ்வாறு வர உத்தேசிப்பவர்களுக்கும் உதவும்.
4. முதற்திரைப்படம் மற்றும் திரைப்படத் துறையின் வரலாறு பற்றிய சில கட்டுரைகளை அடக்கியுள்ளது.
5. திரைபடக் கலை பற்றிய சில தமிழ் நூல்கள் சஞ்சிகைகள் பற்றிய தகவல்களையும் அடக்கியுள்ளது. எனவே தகவற் களஞ்சியமாகவும் பயன்னடக் கூடியது.
நூலாசிரியர் பற்றி
கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் அக்டோபர் முதலாம் திகதிதான் தனது பிறந்த தினத்தை கொண்டயுள்ளளார். இது அவரது 65வது பிறந்ததினம். ஈழத்து இலக்கிய உலகில் கடந்த 45 வருடங்களாக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர் அவர். இன்று அவரை நாம் ஒரு திறனாய்வாளராக அறிந்து கொண்டாலும் இலக்கியத்தில் பல்முறை ஆளுமை கொண்டவர்.
தமிழில் மாத்திரமின்றி ஆங்கிலத்திலும் எழுதுபவர். அவரது முதல் நூல் வெளியீடு ஒரு ஆங்கில நூல்தான். Thamil Writings in Sri Lanka. Tamil அல்ல Thamil என அவர் குறிப்பிட்டது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம். Aspects of culture in Sri Lanka என்ற அடுத்த ஆங்கில் நூல் 1992ல் வெளிவந்தது. நல்ல சிறுகதை எழுத்தாளர். உண்மையில் அவரது முதல் தமிழ் நூல் ஒரு சிறுகதைத் தொகுப்புத்தான். 1982ல் அவரது முதல் சிறுகதைத்த தொகுப்பான சிவகுமாரன் சிறுகதைகள் வெளிவந்தது. இருமை என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு 1998ல் வெளி வந்தது.
அவரது ஏனைய நூல்கள் அனைத்தும் இலக்கியம், திறனாய்வு சார்ந்தது.
விமர்சனத் துறையில் அவரது பங்களிப்பு மும்முனைப்பட்டது. திறனாய்வாளர், மதிப்புரைகள் வழங்குபவர், பத்தி எழுத்தாளர்.
ஆயினும் அவர் தன்னை பெரும்பாலும் பத்தி எழுத்தாளர் என்றே சொல்லிக் கொள்வார். நானும் அவரை ஆரம்பத்தில் பத்தி எழுத்தாளராகவே கண்டு கொண்டவன். 1980ல் அவர் Island பத்திரிகையில் எழுதிய Cleanings என்ற பத்தியை வாராவாரம் மிகுந்த ஆர்வத்தோடு வாசித்து பல புதிய விடயங்களை அதனுடாக்கக் கற்றுக் கொண்டவன்.
பத்தி எழுத்து என்பது லேசானது அல்ல.
அதற்கு இலக்கியத்தில் முக்கிய இடமும் கடமையும் இருக்கிறது. பரந்து பட்ட ரீதியில் மக்களைச் சென்றடைவது. புலமை சார் திறனாய்வாளர்கள் போல இது பல்கலைக்கழக மட்டத்தில் முடங்கிக் கிடப்பது அல்ல. பல்கலைக்கழக மட்டம் முதல் பாமரன் வரை எல்லோரும் விரும்பி வாசிப்பதுதான் பத்தி எழுத்துக்கள்.
இலங்கையில் பத்தி எழுத்துக்கள் என்றவுடன் கே.எஸ்.சிவகுமாரனனோடு வேறு சிலரும் ஞாபகத்திற்கு வருகிறார்கள். சில்லையூர் செல்வராஜன், சோமகாந்தன், அந்தனி ஜீவா, யேசுராஜா, தெளிவத்தை ஜோசப், இரத்தனவேலோன்.
பத்தி எழுத்துக்கள் எப்படி இருக்க வேண்டும்?
புதியன பற்றி எழுத வேண்டும்
பல்துறை பற்றி எழுத வேண்டும்
எழுத்தில் கவர்ச்சியும், வாசகர்களோடு அந்நியோன்யமான தொடர்பு கொண்டிருப்பது போன்று நேரடியாகப் பேச வேண்டும்.
அவர்களை வாசிக்க, கேட்க, பார்க்கத் தூண்ட வேண்டும். வாசகர்களை தேடலில் ஊக்குவிக்க வேண்டும். அதே நேரத்தில் இது புத்தகம், சினிமா, நாடகம், பத்திரிகை போன்றவற்றை விற்பனையாக்கும் மலிவான தந்திரமக இருக்கவும் கூடாது.
எல்லா மட்டத்தினருக்கும் புரியும் படியான இலகு நடை வேண்டும்.
இதனைச் செய்வதற்கான தகமை கே.எஸ்.சிவகுமாரனுக்கு நிறையவே இருக்கிறது.
1. பரந்துபட்ட இலக்கியத் தேடலும் அனுபவமும் இருக்கறது. சிறுகதை நூவல் கவிதை திறனாய்வு மாத்திரமின்றி நாடகம், சினிமா, ஓவியம், புகைப்படம், இசை போன்ற பலதுறைகளில் சார்ந்த ஈடுபாடு, பரிச்சியம், புலமை
2. பரந்த தேடல் உள்ளவர். தமிழில் மாத்திரமின்றி ஆங்கிலத்திலும் தேடுபவர். அவரது பத்திகளைப் படிப்பவர்களுக்கு அவர் எவ்வளவு பரந்த பரப்பில் வாசித்து தன் அறிவை வளர்த்துக் கொள்கிறார் என்பது புரியும். பலரும் வாசிக்கக் கூடும். ஆனால் அதை அவர்தான் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார்.
3. நல்ல கல்வித் தகமை- பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. அத்துடன் படைப்பியல் டிப்ளோமா, இதழியலில் டிப்ளோமா
4. சினிமாத்துறை சார்ந்த பயிற்சி- சினிமா நுகர்வில் மாத்திரமின்றி Film Script writing, Film Direction ஆகியவற்றிலும் Diploma பெற்றிருக்கிறார்.
5. ஆங்கிலப் புலமை இருக்கிறது. இதனால் வேற்று மொழி இலக்கியங்களையும் சர்வதேச கலை இலக்கிய நடப்புகளையும் தமழில் தரக் கூடிய புலமையும், ஆற்றலும் இருக்கிறது. அதேபோல தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்திலும் தரவல்லவர்.
6. பரந்த அனுபவம் இருக்கறது. வெறும் வாசகனும் எழுத்தாளனும் அல்ல. வீரகேசரி, நவமணி, Island, Daily News போன்ற பத்திரைகளின் ஆசிரிய பீடங்களில் பணியாற்றிய அனுபவம், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆங்கில இலக்கிய ஆசிரியராகக் கடமையபற்றிய அனுபவம், இலங்கை வானொலி, ரூபவாஹினி ஆகியவற்றில் ஒலிபரப்பாளனாகவும், ஒளிபரப்பாளனபகவும் கடமையாற்றிய அனுபவங்கள்.
7. தனது திறமையும் புலமையும் புலப்படுமாறு எழுத வேண்டும் என்ற எண்ணமின்றி, மக்ளுக்குத் தேவையானவற்றை இலகு வாசிப்பிற்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும் என்ற மனப் பக்குவம் உள்ளவர்.
8. மென்மையான மனம் கொண்டவர். சுடு சொல்லைத் தாங்க முடியாதவர். அதே போல படைப்பாளியைச் சாகடிக்காமல் படைப்பை விமர்சிக்கும் இலக்கிய நாகரீகம் கொண்டவர்.
இது மீரா பதிப்பத்தின் 25வது வெளியீடு. மீரா பதிப்பகம் இரத்தினவேலோனின் புதிய பயணம் என்ற நூலுடன் ஜூலை 1996ல் ஆரம்பமாகியது. இலக்கியத்தில் தணியாத தாகம் கொண்ட இரத்தினவேலோனின் அயராத உழைப்பில் உருவானது. அவருக்குக் கை கொடுத்து நிற்பவர் பள்ளிப் பருவம் முதல் இன்றுவரை அவரது நண்பனாக இருக்கும் நண்பனான இரஞ்சகுமார். இரண்டு கலைஞர்களின் தயாரிப்பு என்பதால் புத்தகத் தயாரிப்பில் அழகியலும் தொழில் நிபுணத்துவமும் கலந்த முழுக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க் கூடியதாக உள்ளது.
பாலு மகேந்திராவும் கே.எஸ் சிவகுமாரனும் பின்னணியில் நிற்கும் அழகிய அட்டைப்படம். கண்ணுக்கு இதமான எழுத்துருக்களுடன் நேர்த்தியான தயாரிப்பு.
மீரா பதிப்பத்தின் வெளியீடாக வந்த கே.எஸ் சிவகுமாரனது இரு நூல்கள்; மாகாண சாகித்திய பரிசு பெற்றுக் கொண்டதையும் இவ்விடத்தில் நினைவு கொள்ளலாம்.
இறுதியாகச் சொல்வதாயின் எனக்குப் பிடித்த புத்தகம். எனக்கு பல புதிய விடயங்களையும் தகவல்களையும் தந்து எனது பார்வையை விசாலிக்க வைத்த நூல். உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்.
அவர்களின் பவளவிழா ஆண்டு.
01.10.2011 ல் அவர் தனது 75 வயதில்
காலடி எடுத்து வைக்கிறார்.
0.0.0.0
எல்லோர்க்கும் இனியவர் சிவகுமாரன்
என்றும் அவர் இளங்குமரன்
எதிரிக்கும் மங்காத புன்னகை
அவரது ஆயுதம்.
பூவிற்கும் நோகாத மென்மை
எழுத்திலும்..
மென்மையை நோகடிக்கும்
உள்ளத்தின் மென்மை.
படைப்பினைக் கொல்லாத
பதமான விமர்சனம்
பிறமொழிப் புத்தாக்கங்களை
தமிழுக்குப் பரிமாறும் வித்தையில் வல்லவன்.
சீரிய சினமா இதுவெனக் காட்டியவர்
சினமா ரசனையைச் சிக்கெனப் புகட்டியவர்
சினமா பார்க்கச் சென்னைக்கும் பறப்பவர்.
நீண்டு நிறையணும் அவரது வாழ்வு
நாளும் ஒளிவிளக்காக
வழிகாட்டணும் எமக்கெல்லாம்
வாழி வாழி.
0.0.0.0.0.0.0
பவளவிழா நாயகனுக்கு வாழ்த்துக்கள்.
சரியாகப் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் 2001 ல் அவரது அசையும் படிமங்கள் என்ற சினிமா பற்றிய நூல் வெளிவந்தது. அந்தக் கூட்டத்தில் நான் ஆற்றிய உரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
நூல் வெளியீட்டு உரை

![]() |
| கார்த்திகாயினியின் நூல் வெளியீட்டு விழாவில் |
இது மீரா பதிப்பத்தின் 25வது வெளியீடு. மீரா பதிப்பகம் இரத்தினவேலோனின் புதிய பயணம் என்ற நூலுடன் ஜூலை 1996ல் ஆரம்பமாகியது. இலக்கியத்தில் தணியாத தாகம் கொண்ட இரத்தினவேலோனின் அயராத உழைப்பில் உருவானது. அவருக்குக் கை கொடுத்து நிற்பவர் பள்ளிப் பருவம் முதல் இன்றுவரை அவரது நண்பனாக இருக்கும் நண்பனான இரஞ்சகுமார். இரண்டு கலைஞர்களின் தயாரிப்பு என்பதால் புத்தகத் தயாரிப்பில் அழகியலும் தொழில் நிபுணத்துவமும் கலந்த முழுக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க் கூடியதாக உள்ளது.
பாலு மகேந்திராவும் கே.எஸ் சிவகுமாரனும் பின்னணியில் நிற்கும் அழகிய அட்டைப்படம். கண்ணுக்கு இதமான எழுத்துருக்களுடன் நேர்த்தியான தயாரிப்பு.
| பாலு மகேந்திராவுடன் |
மீரா பதிப்பத்தின் வெளியீடாக வந்த கே.எஸ் சிவகுமாரனது இரு நூல்கள்; மாகாண சாகித்திய பரிசு பெற்றுக் கொண்டதையும் இவ்விடத்தில் நினைவு கொள்ளலாம்.
இறுதியாகச் சொல்வதாயின் எனக்குப் பிடித்த புத்தகம். எனக்கு பல புதிய விடயங்களையும் தகவல்களையும் தந்து எனது பார்வையை விசாலிக்க வைத்த நூல். உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்.

1 comments:
Dr. வைத்தியத்துறையையும் தாண்டி பலதுறைகளிலும் உங்களிற்கு இருக்கும் வியக்கத்தக்க ஆளுமை மிகவும் அபாரமானது. பத்தி எழுத்துக்கள் எப்படி இருக்கவேண்டுமென நீங்கள் சொன்னீர்களோ அவை அத்தனையும் உங்கள் எழுத்துக்களில் இருக்கிறது வாழ்த்துக்கள்
Post a Comment
உங்கள் எண்ணங்கள், விமர்சனங்கள் என்னைச் சிந்திக்கத் தூண்டும்.